கியூபாவில் 16 ஆண்டுகளுக்கு பின் அரசியலமைப்பில் மாற்றம்
கியூபாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு கியூபா அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தத்தில் கியூபாவின் அரசியல் அமைப்பின் சோசலிச தன்மையை “மாற்றமுடியாதது” என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 16 ஆண்டுகள் கழித்து புதிய சீர்திருத்தம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. “சோசலிசத்தின் மாற்றமுடியாத இயல்பை” தக்க வைத்துக்கொண்டே கியூபாவின் பொருளாதார மற்றும் வெளியுலகத்துடனான தொடர்பை அரசியலமைப்பின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கமாக உள்ளது.
இதற்கான பணியை கியூபாவின் முன்னாள் அதிபரான ரால் காஸ்ட்ரோ முன்னெடுப்பார் என்று தற்போதைய அதிபர் மிகேல் டியாஸ்-கேனல் அறிவித்துள்ளார்.
காஸ்ட்ரோ சகோதரர்களான பிடல் காஸ்ட்ரோ மற்றும் ரால் காஸ்ட்ரோ ஆகியோர் 1959 முதல் 2018 வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் கியூபாவை ஆட்சி செய்துள்ளனர்.
கியூபாவின் அதிபராக பதவியேற்றுக்கொண்ட டியாஸ்-கேனல் தனது சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் “கியூபாவில் முதலாளித்துவத்தை புகுத்த முயல்வோருக்கு இடம் கிடையாது” என்றார்.
கலப்புப் பொருளாதாரத்தை கியூபா பின்பற்ற முன்வருமா என்றும் ஒரினச் சேர்க்கை திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கப்படுமா என்றும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கின்றது.
Post a Comment