மண்டைதீவு படுகொலை :32வது நினைவேந்தலில்!
1986 ஜீன் 10ம் திகதி குருநகர் துறையில் இருந்து தூயஒளி படகு 31 மீனவர்கனை சுமந்த படி புறப்பட்டது. முகத்துவாரம் வெளிச்சக்கூடு தாண்டி மண்டைதீவுக் கடலில் இறங்கினார்கள் மீனவர்கள். 27 பேர் கரையிறங்க நால்வர் படகில் நின்றனர். வலை வளைக்க ஆயத்தமாக மீனவர்கள் தயாராக பலவிதமான ஆயுதங்கள் பொருத்தப்பட்ட சிறியரக கப்பலில் முகமூடியணிந்தபடி வந்திறங்கினர் சிங்களக் கடற்படையினர். மீனவர்கள் அனைவரையும் கைகட்டித் தலைகுனிந்து நாரிமுட்டக்கடலில் நிற்கும்படி உறுமினார்கள்.
பின்பு கோடரி வாள் கத்தி பொல்லாலும் துவக்குப் பிடியாலும் வெட்டியும் கொத்தியும் அடித்தும் கொன்றனர் 31 பேரையும். மண்டைதீவு நீலக்கடல் எங்கும் பிணம் மிதந்து சிவப்பாய்ச் சுடர்ந்தது அன்று .நாளை 32ஆவது ஆண்டு நினைவுகளை குடும்பங்கள் நினைவுகூர்கின்றன.
ஆனால் அதே கடற்படையின் மூலம் தமக்கு வளலாய் பகுதியில் ஓய்வுவிடுதி கட்டியுள்ளது யாழ்.ஆயர் இல்லம்.
கொல்லப்பட்ட அனைத்து மீனவர்களும் கத்தோலிக்கர்கள் என்பதுடன் அவர்களது உடலங்கள் யாழ்.ஆயர் இல்லத்திற்கு அருகாகவுள்ள கொஞ்செஞ்சி மாதா சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment