இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 34 ஏக்கர் காணி வலி வடக்கில் விடுவிப்பு
வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் படையினரின் ஆக்கிரப்பில் இருத்து மேலும் 34 ஏக்கர் நிலம் நாளைய தினம் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்படவுள்ளது.
வலி. வடக்கில் காங்கேசன்துறை வீதி கடற்கரையோரம் வரை முழுமையாக விடுவிக்கப்பட்டபோதும் வீதியின் ஒரு பக்கத்தில் குடியிருப்புக்களை ஆக்கிரமித்து பெரிய இராணுவ முகாம்கள் தற்போதும் கானப்படுகின்றன.
இவ்வாறு காணப்படும் இராணுவ முகாமில் இருந்து 34 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் பலாலி இராணுவ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதி நிலங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த 34 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படும் பட்சத்தில் காங்கேசன்துறை வீதியோரம் இராணுவம் ஆக்கிரமித்த நிலம் விடுவிக்கப்படும் நிலமை காணப்படுகின்றது. ஆயினும் பொலிசாரினால் பெருமளவு நிலம் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமையே காணப்படுகின்றது.
Post a Comment