வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியில் 3 இடங்களில் புத்தர் சிலைகள்!
வலி.வடக்கில் இராணுவத்தினர் விடுவித்த பகுதிகளில் பெரியளவிலான விகாரை ஒன்றும், வேறு இரு இடங்களில் புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன. வலி.வடக்கில் விடுவிக்கப்படாத பகுதியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று கடந்த காலங்களில் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அந்தப் விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என்றும் அந்தச் செய்திகள் தெரிவித்திருந்தன. |
அந்த விகாரை இராணுவத்தினர் வழிபடவே அமைக்கப்பட்டது. இராணுவத்தினர் அந்த நிலத்தை விட்டு வெளியேறும் போது விகாரை அங்கு இருக்காது என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர். அந்தப் பகுதிகளில் மக்களின் பாவனைக்குத் தற்போது விடுவிக்கப்பட்டபோதும், புத்தர் சிலைகளும், விகாரையும் அங்கு உள்ளன என்று பொதுமக்கள் தெரிவித்தனர். விகாரையை விடவும் இரு வேறு இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் தமது இருப்பிடங்களை அகற்றிச் சென்றுள்ளபோதும் விகாரை, புத்தர் சிலைகளை அகற்றப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். |
Post a Comment