Header Ads

test

சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களை கைப்பற்றியது சீனா


சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

”சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவில் 40 வீதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவின் கட்டுமானத் தொழில்துறையில் தமது பங்கை 70 வீதமாக அதிகரிக்கவுள்ளது. இதனால் எமது உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

அதனால், சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளோம்.

சிறிலங்காவில் கட்டுமானத் திட்டங்களின் போது, உள்ளூர் நிறுவனங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த உடன்பாடு கையெடுத்திடப்பட்டுள்ளது. இதனால் ஆபத்து குறைக்கப்பட்டு விட்டது.

அத்துடன், எந்தவொரு நாட்டினதும்,வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போது, ஒரு சிறிலங்கா பங்காளரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments