Header Ads

test

500 வது நாளில் கிளிநொச்சி:முல்லைதீவு 480?


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களின் நீதிகோரிய போராட்டம் இன்றுடன் 500வது நாளை பூர்த்தி செய்துள்ளது.  அதனை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை தொடர்போராட்டத்தை முன்னெடுத்துவரும் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை அவர்கள் நடத்தியுள்ளனர்.

இதனிடையே இலங்கை அரசை முற்றாக தாம் புறக்கணித்திருப்பதாக தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் சர்வதேசத்தை நம்பியே வீதியில் தொடர்ந்தும் போராடிவருவதாக மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதனிடையே முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த வெள்ளியன்று 29ம் திகதி தமது 480 ஆவது நாளைய போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் பூர்த்தி செய்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக தமது உறவுகளை மீட்பதற்காக கூடாரம் அமைத்து கடந்த வருடம் மார்ச் மாதம் 8-ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கடந்த வெள்ளியன்றுடன் 480 ஆவது நாளை பூர்த்தி செய்திருந்தது.

இதனிடையே தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் அமர்வுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ள நிலையிலே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச தலையீட்டை வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments