பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நாண்டு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே இந்த விவகாரத்தில் அவர் முடிவெடுக்க முடியும் என்பதால், உள்துறை 7 பேரின் விடுதலை கூடாது என அறிவுறுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் கோரிக்கையில் மத்திய அரசு ஒத்துப்போகவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரிலே ஜனாதிபதி மனுவை நிராகரித்துள்ளார்.

Post a Comment