80 இலட்சம் ரூபா ஏ.ரி.எம். கொள்ளை - இருவர் கைது
வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்களில் பணம் கொள்ளை அடித்த இரண்டு பேரை நீர்கொழும்பு, குரன பிரதேசத்தில் பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு மற்றும் ஜாஎல பிரதேசத்தில் உள்ள பல வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்களில் இருந்து இவர்கள் 80 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளை அடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கொள்ளை அடித்த பணத்தில் கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சகைது செய்யப்பட்டவர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று (17) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment