சட்டம் ஒழுங்கை பேண ஆளுநரிடம் அடைக்கலம்?
யாழ்.குடாநாட்டில் சட்டமொழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுவருகின்றது.நாள் தோறும் கொள்ளை,வாள்வெட்டென சட்டவிரோத கும்பல்களின் நடவடிக்கை உச்சம் பெற்றுள்ளது.கொள்ளைகள் மற்றும் வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்த முடியாது இலங்கை காவல்துறை வேடிக்கை பார்த்துவருகின்றது.அல்லது அத்தகைய குழுக்களுடன் பின்கதவு உறவுகளை பேணிவருகின்றதென்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே குற்றச்சம்பவங்களை மூடிமறைக்கவே காவல்துறை முனைப்பு காட்டிவருகின்றது.அண்மையில் உடுப்பிட்டியில் வீடொன்றில் 47 இலட்சம் திருடப்பட்ட சம்பவத்தில் வேறு அறையில் இருந்த மற்றொரு தொகுதி பணத்தை எடுத்து அதனை களவாடிய பணத்தை மீட்டதாக வல்வெட்டித்துறை காவல்துறை நாடகம் ஆடியிருந்தமை அம்பலமாகியுள்ளது.இதனை முன்னெடுக்க தமிழரசுக்கட்சி நாளிதழ் செய்திகளை திரிபுபடுத்தி வெளிப்படுத்தியமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே களவு,கொள்ளை,வாள்வெட்டு என்பவற்றை தாண்டி ஆயுதமுனையில் பாலியல் வல்லுறவென பரிணாமம் பெற்றுள்ள நிலையில் சமூக விரேத செயல்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் வடமாகாண ஆளுநர் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 09 ஆம்திகதி திங்கட்கிழமை யாழில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வடக்கில் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூக விரோத செயல்கள் இடம்பெற்றவண்ணமுள்ளது. அண்மையில் பாடசாலைமாணவி ஒருவர் கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கும் மக்களுக்கு விழிப்பணர்வுகளை ஏற்படுத்தும் நோக்குடன் அரச சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் கலந்துரையாடலிற்கு மாவை அறிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் பொலிஸார் மற்றும் முப்படை பிரதானிகள் மற்றும் சமூக சேவை திணைக்களங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைஅமைச்சர்கள் , உறுப்பினர்கள் , பிரதேச சபையின் தவிசாளர் போன்றவர்களை உள்ளடக்கிய சந்திப்பு இடம்பெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
எனினும் வழமை போலவே முதலமைச்சரை புறந்தள்ளி கூட்டத்திற்கு மாவை தரப்பு முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment