றெஜீனாவுக்கு நீதி கோரி வீதி மறிப்புப் போராட்டம்
சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி, அந்தப் பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பிரதான வீதியை மறித்து இன்று (28) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேல் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்கின்ற போதும், சம்பவ இடத்துக்கு இதுவரை அரசியல்வாதிகள் எவரும் வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலை சென்ன சுழிபுரத்தைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமி றெஜீனா, கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது கழுத்தில் கீறல் காயங்கள் இருந்தமையால் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் அறுவரைக் கைது செய்தனர். அவர்களில் ஐவரை நேற்று பொலிஸ் பிணையில் விடுவித்திருந்தனர்.
Post a Comment