Header Ads

test

பசு மாடு கடத்தி வெட்டும் மஸ்தானுக்கு இந்துகலாசார அலுவல்கள் பிரதி அமைச்சு


வடக்கில் மாடுகடத்தல் மற்றும் சட்டவிரோதமாக மாடுகளையும் பசுக்களையும் வெட்டி தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் சூத்திரதாரி என நம்பப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு சிறிலங்கா அரசாங்கம் இந்துகலாசார அலுவல்கள் பிரதி அமைச்சினை வழங்கியுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், இந்துகலாசார அலுவல்கள் மற்றும் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் - புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இன்று (12) சிறிலங்கா அரசினால் நியமிக்கப்பட்டள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பிரதி அமைச்சர் பதவியையும் மைத்திரிபால சிறிசேன இன்று வழங்கிவைத்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் வகையிலேயே காதர் மஸ்தானுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும் இந்துக்களின் இறை நம்பிக்கையான பசுக்களைக் சட்டவிரோதமாகக் கடத்தி வெட்டுக்கும் இவருக்கு இந்துகலாசார அலுவல்கள் பிரதி அமைச்சு வழங்கப்பட்டமை குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள  இந்து அமைப்புக்கள் இது மதங்களுக்கிடையிலான குரோதப் போக்கினையே தோற்றுவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளன.

அண்மையில் சாவகச்சேரி கொள்கலனில் கன்றுத்தாச்சி பசுக்கள் உள்ளிட்ட பல மாடுகள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டபோது பிடிக்கப்பட்டதோடு அதற்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் போராட்டங்களில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments