Header Ads

test

தேவிபுரம் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணி! - மாவீரர் நாளுக்கு இப்போதே ஏற்பாடுகள்

இறுதிப்போரின் போது வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம், இன்று காலை சிரமதானப் பணிகள் மூலம் துப்புரவு செய்யப்பட்டன. தேவிபுரம் மாவீரர் துயிலுமில்ல செயற்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இந்தச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

 
கடந்த ஆண்டு மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் குறுகிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இம்முறை முன்னதாகவே மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டதன் அடிப்படையிலேயே காணியினை துப்பரவு செய்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்குடன் இந்த சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த சிரமதானப்பணியில் மாவீரர்களது பெற்றோர், உறவுகள், தேவிபுரமக்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments