வறணி விவகாரம்:அவசரமாக கூடுகின்றது சைவமகாசபை!
யாழ்ப்பாணத்தின் வரணியிலுள்ள ஆலயத்தில் தேர்த்திருவிழாவிற்கு உள்ளுர் மக்களிற்கு அனுமதி மறுத்தமை மற்றும் கனரக வாகனத்தில் கட்டியிழுத்த விவகாரம் தொடர்பில் அவசர கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சைவ மகா சபை இதற்கான அழைப்பினை விடுத்துள்ளது.
கொக்குவில் இந்துக் கல்லூரி வீதியிலுள்ள சைவ மகா சபை தலைமையகத்தில் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுர் மக்களை வழிபட அனுமதி மறுத்தவர்களுக்கு எதிராகவும் இது போன்ற மனித நேயத்திற்கும் சைவத்தின் அடிப்படைக் கொள்கைகளிற்கு எதிராக தொழிற்படும் குழுக்களின் அக்கிராமங்களை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
அத்துடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை உட்பட காத்திரமான சகல வழிமுறைகளையும் உடனடியாக முன் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment