Header Ads

test

ஒட்டுசுட்டானில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், தொட்டியடிப் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய கேதீஸ்வரன் மதுசுதா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை சிறுமி அவரது வீட்டின் பின்புறம் உள்ள கூழா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து அயலில் உள்ளவர்கள் ஒட்டுசுட்டான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய சிறுமியின் சடலம் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.

No comments