Header Ads

test

தேவாலயத்துக்கு வந்தவரையே பொலிசார் சுட்டனர் - மல்லாகத்தில் மக்கள் போராட்டம்


மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டநிலையில் மல்லாகம் சகாய மாதா ஆலயத்தில் பெருநாளில் கலந்துகொண்ட மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் மல்லாகம் சகாய மாதா கோவிலடியில் வீதி போக்குவரத்து தடைப்பட்டதுடன் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பகுதியெங்கும் விசேட அதிரடிப்படையினரும்  பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களும் பலர் சகாஜமாத ஆலய வளவினுள் குவிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சம்பவ இடத்தில் இரு குழுக்களுக்கிடைய மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கும் நிலையில் அதனை பொது மக்கள் மறுக்கின்றனர். மல்லாகம் சகாஜமாதா தேவாலய பெருநாளில் பங்கேற்ற இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி மல்லாகம் சகாயமாத மாதா கோவிலடியில் இன்றிரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் மல்லாகம் குழமங்காடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 32) என்ற இளைஞனே நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக மல்லாகம் அரச வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

No comments