முதலமைச்சர் கோரினால் ராஜினாமா:டெனீஸ்வரன் தயார்!
வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தொடர்பில் விசேட அமர்வொன்றிற்கு தமிழரசு குத்திமுறியத்தொடங்கியுள்ளது.இதன் மூலம் மீண்டும் முதலமைச்சரிற்கு குடைச்சலை கொடுப்பதற்கான முயற்சிகளிலேயே தமிழரசு தரப்புக்கள் அவசரம் காட்டத்தொடங்கியுள்ளன.
இதனிடையே முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரினால் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக நெருங்கியவட்டாரங்களிடம் தெரிவித்துள்ளார்.தமிழரசுக்கட்சி தன்னை நட்டாற்றில் கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தொடர்ந்தும் முதலமைச்சருடன் இணைந்து எதிர்வருங்காலங்களில் பணியாற்றவே விருப்பங்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே டெனீஸ்வரன் அமைச்சினை பொறுப்பேற்றாலும் வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே ஆட்சிக்காலத்திற்குள்ளதால் அதற்கான நிதி ஒதுக்கீட்டை பெறமுடியாதென்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.நிதி ஒதுக்கீடற்ற நிலையில் பெயரளவில் அமைச்சராக இருப்பது தேவையற்றதென டெனீஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனது சட்டத்தரணியிடமிருந்து நீதிமன்ற தீர்ப்பின் பிரதியை பெற்றுக்கொள்ள முதலமைச்சர் காத்திருக்கின்றார்.பெரும்பாலும் அவர் மேன்முறையீடு செய்ய முற்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கைத் தொடர்ந்தேன். பழைய அமைச்சு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளதென பா.டெனீஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment