Header Ads

test

மல்லாகத்தில் காவல்துறை சூடு:ஒருவர் உயிரிழப்பு!



மல்லாகம் சகாயமாதா கோவிலடியில் இலங்கை காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட இளைஞர் பாக்கியராசா சுதர்சன்(வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவரது சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையலி ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதனிடையே குழு மோதலில் காயமடைந்தவர்களும்; வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இலங்கை காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இரு குழுக்களுக்கிடையே நடைபெற்ற வாள்வெட்டு மோதலில் தலையிட்ட சுன்னாகம் காவல்துறை  நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவர துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்துப்பாக்கி சூட்டினிலேயே பொதுமகன் ஒருவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது.


அண்மைக்காலமாக குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள் பல தலைதூக்கியுள்ளதுடன் காவல்துறை மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டும் வருகின்றது.

சட்டமொழுங்கை பேணாது குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தரப்புக்களுடன் காவல்துறை நெருங்கிய உறவை பேணுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டும் வருகின்றது. இந்நிலையில் இலங்கை காவல்துறை மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments