கோத்தா தலையீட்டில் ஞானசாரர் விடுதலை!
பொதுபலசேனவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் நகர்வுகளே வெற்றி பெற்றிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ஞானசார தேரர் பினணயில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதெனவும் நீதவான் நிபந்தணை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞானசார தேரரரை பிணையில் விடுதலை செய்வதற்கு இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.
சிறிய குற்றம் என்பதாலும் மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த அமைப்புகளின் அழுத்தங்கள் உள்ளதாகவும், இதனால் ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்ய முடியும் என இலங்கைச் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
ஞானசார தேரர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படுவார் என அமைச்சர் பாலித ரங்க பண்டார கடந்த புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அதேபோன்று அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும், ஞானசார தேரர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்படவார் என கூறியிருந்தார்.
ஆயினும் கோத்தபாயவின் நேரடி வழிநடத்தலில் ஞானசாரர் விடுதலை செய்யப்பட்டுள்ள போதும் பின்னணியிலிருந்த கோத்தா பற்றி தெற்கு மௌனம் காத்துள்ளது.
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னொளி கொடவின் மனைவி, சந்தியா எக்னொளி கொடவை 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஞானசார தேரர் அச்சுறுத்தியிருந்தார்.இதன் தொடர்ச்சியாகவே ஞானசார தேரர் தண்டிக்கப்பட்டிருந்தார்.
அதேவேளை, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரணை விடுதலை செய்வதில் சட்டப்பிரச்சினை இருப்பதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. கடந்தவாரம் கிளிநொச்சியில் வைத்து எதர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறியிருந்தார்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீதான குண்டுத் தாக்குதலின் சந்தேக நபராகக் கைதாகி, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா என்ற சைவசமயக் குருக்களை விடுதலை செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் அந்தக் குருக்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment