Header Ads

test

ஆனந்தசுதாகரனை உடனடியாக விடுவிக்க முடியாது! முதலமைச்சரிடம் விளக்கம் அளித்த மைத்திரி!

ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறை­யி­லுள்ள அர­சியல் கைதி­யான ஆனந்தசுதா­க­ரனை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய முடி­யாத நிலைமை காணப்­ப­டு­வ­தாக சிறீலங்கா ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறியுள்ளார்.

கிளி­நொச்­சியில் நேற்று நடை­பெற்ற சிறு­வர்­களை பாது­காப்போம் என்ற தேசிய செயற்­திட்ட மாநாட்டில் பங்­கேற்­றி­ருந்த மைத்திரிபால சிறீசேன, அந்த நிகழ்வில் கலந்­து­கொண்ட முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரனிடமே குறித்த பதிலைக் கூறியுள்ளார்.

அவ­ரது மனைவி மனைவி உயி­ரி­ழந்­துள்­ள­மை­யினால் இரு பிள்­ளை­களும் பெரும் கஷ்ட்ங்­களை அனு­பித்து வரு­வ­தனால் அர­சியல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று முத­ல­மைச்சர் கேட்டுக் கொண்டார்.

ஆனந்த சுதா­க­ரனைப் போல் பலர் சிறையில் உள்­ளனர். இவரை விடுவித்தால் அவர்­களும் தம்மை விடு­விக்­கு­மாறு கோரு­வார்கள். இதனால் உட­ன­டி­யாக இதற்கு இடமளிக்­க­மு­டி­யாத நிலை காணப்படுகின்­றது என மைத்திரி முதலமைச்சருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் பதிலை அடுத்து கருத்து தெரி­வித்த முத­ல­மைச்சர் அவ்வா­றாயின் ஆயுள் தண்­டனை கைதி­யான

ஆனந்த சுதா­க­ரனை பிள்­ளைகள் அடிக்­கடி சென்று பார்க்­கக்­கூ­டிய வகையில் அருகில் உள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றுமாரு கேட்டுள்ளார். இதற்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி அதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

No comments