Header Ads

test

மல்லாகம் துப்பாக்கிச் சூடு! சடலத்தைப் பெறுவதற்கு குடும்பத்தினர் காத்திருப்பு!

மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞனது சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மல்லாகம் குளமங்கலம் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். குறித்த இளைஞனது சடலத்தைப் பெறுவதற்கு உறவினர்கள் இன்று செவ்வாக்கிழமை (19) காலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சடல அறை முன்பாகக் காத்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் உடற்கூடு ஆய்வுகள் ஆரம்பபிக்கப்பட்டுள்ளன என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments