Header Ads

test

அமொிக்க உளவுப் விமானத் தாக்குதலில் தலிபான் இயத்தின் தலைவர் பலி!

ஆப்கானிஸ்தானில் அமொிக்க வான்படையின் ஆளில்லா உளவு விமானம் நடத்திய தாக்குதலில் தொிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முல்லா பாஸல் கொல்லப்பட்டதாக அமொிக்க இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

முல்லா பாஸல் உல்லா வசிக்கும் இடத்தை குறிவைத்து நேற்றுப் புதன்கிழமை நடத்திய அமெரிக்க ஆளில்லா உளவு விமானம்  தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கொல்லப்பட்ட  முல்லா பாஸல் தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பெஷாவரில் இருக்கும் ராணுவ பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு இந்த இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 151 மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments