Header Ads

test

முல்லைதீவில் போதை மாத்திரை தாராளம்!

முல்லைத்தீவு மாவட்ட மருந்தகங்கள் ஊடாகவே தெற்கிற்கு அதிகளவான உடலுறவு போதை மாத்திரைகள்விநியோகிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞ.குணசீலன் குற்றம் சாட்டியுள்ளார். 


இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற மருந்தகங்கள் ஒன்றும் எட்டு ஆண்டுகளாக பதிவுசெய்யப்படவில்லை  என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்தகத்தினை நடத்துபவர்களுக்கும் மருத்துவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை கருக்கலைப்பிற்கான மருந்துகள் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் ஒரு தாய் சட்டவிரோத மருந்தினை வைத்து கர்ப்பப்பை வெடித்து உயிரிழந்துள்ளார் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இன்னொரு அம்மா கருக்கலைப்பிற்காக வில்லைகளை பாவித்து குருதிப்பெருக்கில் சிக்கி எங்களிடம் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாலைநேரத்தில் தாம்பத்திய உறவிற்காக உற்சாகப்படுத்தும் மருந்துகளை விற்பனை செய்ய அரசாங்கம் அங்கிகரித்துள்ள நிலையில் மருத்துவரின் சான்றுடன்தான் அவை பெற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்துதான் அதிகளவான மாத்திரைகள் வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளன. தென்பகுதிக்கு இது கடத்தப்படுவதாக முறைப்பாடும் வந்துள்ளது. மருத்துவதுறை பலசரக்கு கடையல்லவெனவும் வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினரும் வைத்தியருமான சிவமோகனின் தூண்டுதலில் அமைச்சர் குணசீலனின் நடவடிக்கைகளிற்கு எதிராக போராட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் முல்லைதீவில் மருத்துவ நிலையங்கள் மீது நடவடிக்கைகளை எடுத்தமை தொடர்பில் குணசீலன் விளக்கமளித்துள்ளார். 

No comments