இளைஞனின் இறுதி ஊர்வலம் இன்று,மல்லாகம் பகுதியில் பலத்த பாதுகாப்பு!
மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் பாக்கியராஜா சுதர்சன் (வயது 28) எனும் இளைஞர் உயிரிழந்தார்.குறித்த இளைஞரின் இறுதி கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் இளைஞர்கள் வன்னமுறையில் ஈடுபடக்கூடும் என மல்லாகம் பகுதியெங்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
உயிரிழந்த இளைஞனின் நல்லடக்க ஆராதனை குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் இன்று மாலை 3மணியளவில் நடைபெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு குளமங்கால் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை குறித்த இளைஞனைச் சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்காத சூழ்நிலையில் மல்லாகம் பகுதியில் இளைஞர்களும் வயதான பெண்களும் இணைந்து வீதி மறிப்பு உள்ளிட்ட போராட்டங்களுக்கு முனைப்புக் காட்டிவருவதாகவும் தெரியவருகின்றது.இதனால் பிற பிரதேசங்களில் இருந்து பேருந்துகளில் பொலிசார் அழைத்துவரப்பட்டு நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Post a Comment