நாளை கடையடைப்பு:அனந்தி வந்தால் செருப்படியாம்?
சுழிபுரம் மாணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு நாளை வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்பு நடத்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் காட்டுபுலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவனேஸ்வரன் றெஜீனா (வயது - 6 ) என்ற சிறுமி அப்பகுதி தோட்டக் கிணற்றிலிருந்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை (25) மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவத்தையடுத்து சிறுமியின் உறவினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நால்வர் காவல்துறையினரால்; அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர். மேலும் இருவர் பின்னர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.
அவர்களில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என ஒருவரை மட்டும் பிரதான சந்தேகநபராக குறிப்பிட்ட வட்டுக்கோட்டை காவல்துறை ஏனைய ஐந்து பேரையும் பிணையில் விடுவித்தது.
இந்நிலையில் நாளை கடையடைப்பு கோரிக்கைக்கு பலதரப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்திவருகின்றன.
இதனிடையே கொல்லப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி முன்னெடுக்கப்படும் போராட்ட களப்பக்கம் வடமாகாண பெண் அமைச்சரான அனந்தி சசிதரனோ கல்வி அமைச்சரோ எட்டிக்கூட பார்த்திராமை மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
அதிலும் அயல்கிராமத்தை சேர்ந்த அனந்தி கணிசமான வாக்குகளை இக்கிராமங்களிலேயே பெற்றிருந்தார்.
இந்நிலையில் அடுத்த தேர்தலில் வாக்குகேட்டு அனந்தி எங்கள் கிராமம் வந்தால் செருப்படியே பரிசாக கிடைக்குமென மக்கள் பகிரங்கமாக ஊடகங்களிற்கு தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment