மல்லாகம் சூடு:காவல்துறையும் கைது!
யாழ்.மல்லாகம் பகுதியில் தேவாலயத்தில் வைத்து இளைஞர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை உத்தியோத்தர்; கைது செய்யபட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கைதான குறித்த இலங்கை காவல்துறை உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அதிபர் ரொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே மல்லாகம் பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தில், இளைஞர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவ்விடத்தில் மோதல்களில் ஈடுபட்ட இரண்டு குழுக்களைச் சேர்ந்த ஐவரே, இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் நேற்று (17) இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதோடு, இன்னொருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்டதாக உயிரிழந்தவரது நண்பர்கள் சிலரும் கைதாகியுள்ளனர்.
Post a Comment