“சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த” – தடுமாறினார் சு.கவின் புதிய பொதுச்செயலர்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலர், ஊடகவியலாளர்களுடனான தனது முதலாவது சந்திப்பின் போது, வாய் தடுமாறி, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய பொதுச்செயலராக பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களை அவர் சந்தித்த போது, ‘அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசாங்கத்தை அமைக்கும்” என்று, கூறினார்.
பின்னர் தனது தவறை விளங்கிக் கொண்டு, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் என்று திருத்திக் கொண்டார்.
நாட்டின் தேசிய நலன்களை பாதுகாக்கும் தொலைநோக்குடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்னோக்கி நடைபோடும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment