Header Ads

test

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலத்தை நீடிக்க முடியாது - பெரமுன எதிர்ப்பு

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு மகிந்த ராஜபக்ச சார்பு  சிறிலங்கா பொதுஜன முன்னணி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வடக்கு மாகாணசபையின் தேர்தலைப் பிற்போட்டு, தற்போதைய சபையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு பதவிக்காலம் முடிந்த மூன்று மாகாண சபைகள் ஆளுனர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட நிலையில், தனியொரு மாகாண சபையுடன், சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு உடன்பாடு ஒன்றை செய்து கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணசபையின், அங்கமாக இருக்கும் அவருக்கு சிறப்பு நிலை  இருக்க முடியாது என்பது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்காது.

எந்தவொரு சூழ்நிலையிலும், முதலமைச்சரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்றார்.

No comments