Header Ads

test

போதைபொருள் கடத்தல் பாதையாக யாழ்.குடாநாடு?


இந்தியாவிலிருந்து கடலின் வழியாக இலங்கையினுள் போதை கடத்தலுக்கான உள்நுழைவு பகுதியாக யாழ்ப்பணம் காணப்படுகிறது. இலங்கை கடற்படை மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்களில் ஒரு பிரிவினரது ஆதரவுடன் அரங்கேற்றப்படும் கடத்தலாகவே இதனை சமூக ஆய்வாளர் ஒருவர் ஆவணப்படுத்தியுள்ளார்.

குறித்த இரண்டு தரப்பும் தொடர்பு படாமல் கடல் வழியாக எந்த நிகழ்வும் இடம்பெற முடியாது. கடற்படையின் ரேடார்களின் கண்கானிப்பினை மீறி எந்த படகும் நுழையமுடியாது. இந்த நிலையில எவ்வாறு போதை கடத்தல் நடைபெறுகிறது? நிச்சயமாக தமிழர் கடற்கரை இந்த சமூக விரோத செயற்பாடுகளுக்கு பயன்படுகிறது என்பது கசப்பான உண்மை. அதனால் தான் சில சக்திகளுக்கு கரையோரப்பிரதேசங்களில் மக்கள் நடமாட்டம் என்பது கசப்பானதாக இருக்கிறதெனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

யாழ்மாவட்ட கடற்தொழிலாளர் சங்களின் சமாசம் இதற்கான தடுப்பு நடவடிக்கையினை எடுக்கமுன்வரவேண்டுமென அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கரையோர கண்கானிப்பு குழுக்கள் அமைக்கப்படுவதுடன் கரையோர பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்தினை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படவேண்டும்.

இதன் மூலமே கடத்தலை கட்டுப்படுத்த முடியுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

சில சக்திகள் கரையோர பிரதேசத்தில் மக்கள் நடமாட்டத்தினை மட்டுப்படுத்துகிற செயற்பாடுகளில் ஈடுபடுவதனை காணலாம் .உதாரணமாக அக்கரை உல்லாச பிரயாண கடற்கரை முயற்சி மீது முன்வைக்கப்படுகிற விமர்சனங்களை சுட்டிக்காட்டியுள்ள தரப்புக்கள் தாளையடி கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலை தொடர்பான விமர்சனங்கள் கூட இந்த வகையானதாக இருக்கலாமென சந்தேகம் எழுப்பியுள்ளன.

கடந்த பத்து மாத காலப்பகுதியினுள் எவ்வாறு போதை பொருள் வந்தடைந்ததென்பதை அடையாளப்படுத்தியுள்ள போதும் இவை அகப்பட்டுக்கொண்டவை தொடர்பான கணக்குகள் என்பதால் தப்பி சென்றவை பற்றிய புள்ளிவிபரங்கள் உள்ளடங்கியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

1. 23.02.2016 பருத்திதுறை 60 கிலோ
2. 23.04.2016 மன்னார் 32 கிலோ
3. 05.04.2016 மிருசுவில் 96 கிலோ
4. 28.06.2016 அச்சுவேலி 90 கிலோ
5. 21.07.2016 மாதகல் 55 கிலோ
6. 24.07.2016 மன்னார் 140 கிலோ
7. 25.07.2016 உடுவில் 6 கிலோ
8. 30.07.2016 மன்னார் 18 கிலோ
9. 6.07.2016 பருத்திதுறை 40 கிலோ
10. 14.07.2016 மாதகல் 14 கிலோ
11. 02.08.2016 பருத்திதுறை 2 கிலோ
12. 05.08.2016 மன்னார் 14 கிலோ
13. 11.08.2016 மன்னார் 2 கிலோ
14. 13.08.2016 பருத்திதுறை 4 கிலோ
15. 27.09.2016 மருதங்கேனி 82 கிலோ
16. 12.10.2016 மணற்காடு 12 கிலோ
17. 16.10.2016 மாதகல் 106 கிலோ
18. 15.10.2016 தொண்டமனலாறு 15 கிலோ
19. 17.11.2016 மாதகல் 52 கிலோ
20. 28.11.2016 பருத்திதுறை 42 கிலோ
21. 2.11.2016 காரைநகர் 74 கிலோ
22. 4.11.2016 மாதகல் 52 கிலோ
23. 8.11.2016 சுன்டிகுளம் 118 கிலோ
24. 15.12.2016 குடத்தனை 30 கிலோ
25. 18.12.2016 நெடுந்தீவு 17 கிலோ

No comments