திங்கட்கிழமை கடையடைப்பு?
வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறலை கண்டித்தும் அத்தகைய அத்துமீறலை நியாயப்படுத்தி அவர்களிற்கு அங்கீகாரம் வழங்கும் கூட்டமைப்பின் போல முகமூடிகளை கிழித்தெறியவும் கடையடைப்பு போராட்டமொன்றுக்கு அழைப்புவிடுக்கப்படலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் திங்கட்கிழமை கடையடைப்பை முன்னெடுப்பது தொடர்பில் கடற்றொழில் அமைப்புக்கள் தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே போராட்டத்திற்கு ஆதரவு கோரி பல தரப்புக்களையும் கடற்றொழில் அமைப்புக்கள் சந்தித்துவருகின்றன.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை சுமந்திரன் மற்றும் அவரது தொண்டரடிப்பொடிகள் நடத்திய கடற்றொழில் நீரியல் வளத்துறை அலுவலக முற்றுகைப்போராட்டத்தை கண்துடைப்பென கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
தென்னிலங்கை மீனவர்களிற்கு இங்கு அனுமதியில்லை.ஆனால் சுமந்திரன் போன்றவர்கள் சட்டரீதியாக அவர்கள் தங்க திட்டம் வகுத்துக்கொண்டிருக்கின்றனர்.தென்னிலங்கை மீனவர்களது வருகையின் சூத்திரதாரிகளுள் ஒருவரான அஸ்மின் நேற்றைய போராட்டத்தில் முன்னால் அமர்ந்திருக்கின்றார்.இதன் மூலம் இப்போராட்டம் எத்தகைய ஏமாற்று என்பது தெரிகின்றதெனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Post a Comment