சாவகச்சேரியில் சொகுசு பேருந்து, கார் விபத்து - மூவர் காயம்
இன்று (10) இரவு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து சாவகச்சேரி சந்திப் பகுதியை அண்மித்தபோது எதிர்த்திசையில் பயணித்த கார் திசை மாறி வேகமாக வந்து பேருந்தின்மீது மோதியதாக பேருந்தில் பயணித்த ஒருவர் தெரிவித்தார்.
காரில் பயணித்த மூவரும் காயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாகச்சேரிப் பொலிசார் விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment