Header Ads

test

சிங்கப்பூர் தீவில் சந்திக்கின்றனர் டிரம்ப் - கிம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், இந்த சந்திப்புக்கு உறுதுணையாக உள்ள சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments