Header Ads

test

தபால் ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தபால் சேவை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இன்று நள்ளிரவு முதல் கைவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீமுடன் இன்று (26) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து 16 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த வேலை நிறுத்த போராட்டம் இன்று நள்ளிரவு முதல் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments