Header Ads

test

லண்டனில் உல்லாச விடுதியில் தீ! உல்லாசப் பயணிகள் அவசரமாக வெளியேற்றம்!

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள உல்லாச விடுதியின் மேற்கூரையில் நேற்றுப் புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 100-க்கு மேற்பட்ட வீரர்கள் போராடினர்.

இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளித்தது. தகவல் அறிந்து அங்கு 20க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன.

அதில் 120க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி  தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

36 உல்லாசப் பயணிகள் மற்றும் 250 வேலையாட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டுள்ளது.

No comments