Header Ads

test

சிறிலங்கா இராணுவ மேஜர் ஜெனரல் தர அதிகாரி கைது

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் தர அதிகாரி, வாதுவ பிரதேசத்தில், மூன்று மாத ஆடம்பர வீடு ஒன்றைக் கட்டி வந்தார்.

அதன் கட்டுமானப் பணிகளில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 12 படையினரை ஈடுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே அவரை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

No comments