Header Ads

test

விக்கியின் விழாவிற்கு சம்பந்தன் அதிபதி


வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் உரைகள் அடங்கிய நுல் வெளியீட்டு விழாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை பிரதம அதிதியாக அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது வருகையை உறுதிப்படுத்த சம்பந்தன் பின்னடித்ததால் அழைப்பிதழில் சம்பந்தனின் பெயர் இடம்பெற்றிருக்காத போதிலும் விக்கினேஸ்வரன் தரப்பினர் சம்பந்தனை அழைப்பதில் விடாப்பிடியாக நின்றதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டபோதிலும் பிரதம அதிதி அந்தஸ்துடன் கலந்துகொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இணங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் அரங்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகின்றார். வரவிருக்கும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விக்கினேஸ்வரனை நிறுத்தப்போதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் விக்கினேஸ்வரனின் நுல் வெளியீட்டு விழாவிற்கு சம்பந்தன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கூர்ந்து நோக்கப்படுகின்றது.

No comments