சவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது!
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின.
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 22வது நிமிடத்தில் உருகுவே அணியின் நடசத்திர வீரர் லூயிஸ் சுவாரசு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் உருகுவே அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து, ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில், உருகுவே அணி சவுதி அரேபியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் உருகுவே அணி 2-வது சுற்றை நெருங்கியுள்ளது. உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரசுக்கு இது 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment