ஞானசார தேரர் விவகாரம்;சந்தியா எக்னலிகொட
ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தான் புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்
ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் ஊடாக நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை அறியாமல் விபரங்களை அறிந்துகொள்ளாமல் மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்கின்றனர் என சந்தியா தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனாவின் ஞானசார தேரர் விவகாரத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாத முகப்புத்தக பயனாளர்கள் மரண அச்சுறுத்தலை விடுத்துகின்றனர் அவர்களில் பலர் எனது கணவர் விடுதலைப்புலிகளின் உளவாளி என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மிரட்டல் விடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.
சில ஆண்கள் உண்மையை அறியாமல் ஆதரவற்ற பெண் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் ஆட்சி புரிந்த வேளை இவற்றை மக்கள் மனதில் புகுத்தியுள்ளனர் அவை இன்றும் நீடிக்கின்றன.
Post a Comment