Header Ads

test

போலிக் கிராம அலுவலர் யாழில் கைது

கிராம அலுவலகர் எனத் தெரிவித்து ஏமாற்ற முயன்றவர் பொது மக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கிராம அலுவலகர் என்றும் சமாதான நீதிவான் என்றும் மாறுபட்ட தகவல்களை வழங்கி பொது மக்களை ஏமாற்ற சந்தேகநபர் முற்பட்டுள்ளார்.

அவர் தொடர்பில் சந்தேகம் கொண்ட சிலர் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments