முல்லையில் விமானப்படையும் புதையல் தேடுகின்றதாம்!
முள்ளிவாய்காலில் விடுதலைப் புலிகள் புதைத்துவைத்ததாக நம்பப்படும் புதையலை இலங்கை விமானப்படையினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் நிலத்தை அகழ்ந்து புதையல் தேடிய சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த மூன்று பேர் சிறிலங்கா காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
எனினும் பின்னராக விமானப்படை தலைமையகத்தால் வழங்கப்பட்ட தகவலையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட்ட பகுதியில் விமானப்படையினரின் தேடுதல் மக்களிடையே சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
Post a Comment