அரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்ககத்தின் நூல் வெளியீடு
அரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கம் எழுதிய அரசியல் சிந்தனை நூல்வரிசை பத்து சிறு நூல்களின் வெளியீட்டு விழா இன்று பிற்பகல் 4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் அருட்தந்தை ம.சக்திவேல் தலைமையுரை நிகழ்த்தினார்.
நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து நூல் பதிப்பீட்டுரையை யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி.கணேசலிங்கம் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோரும் கருத்துரையினை ஆசிரியர் வே.இந்திரச்செல்வனும் நிகழ்த்தினர்.
நிகழ்வில் மலையக நாட்டார் பாடல்கள் கலைஞர் கதிரவேலு விமலநாதனுக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மலையக நாட்டார் பாடல்கள் குறித்து கதிரவேலு விமலநாதன் பாடல்கள் சில பாடி உரை நிகழ்த்தினார்
அரசியல் ஆய்வாளர் சி.ஏ.யோதிலிங்கத்தின் ஏற்புரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
Post a Comment