சிறிலங்காவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் - இந்தியாவுக்கு மகிந்த எச்சரிக்கை
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யாது என்று நம்புகிறேன்” என சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“இந்த தேர்தலின் இறுதி முடிவுகளில் மேற்குலகம் மற்றும் இந்தியாவினால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இந்தியா பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முனையும். இந்தியா மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாடாக இருக்கிறது. இந்தியா சிறிலங்கா மீது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு செல்வாக்கைச் செலுத்துகிறது.
அத்தகைய தலையீடுகளைச் சமாளிக்கும் வகையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment