Header Ads

test

சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!

இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் திடீரென தொடர்பு எல்லையிலிருந்து விலகி சென்றிருந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை(02), திருவனந்தபுரத்தில் இருந்து மொரீசியஸ் தீவு நோக்கி, பயணித்துக்கொண்டிருந்த விமானம், சுமார் 12 முதல் 14 நிமிடங்கள் வரை அந்நாட்டு தகவல் தொடர்பு எல்லையில் இருந்து விலகி இருந்ததுள்ளது.

எனினும் சில நிமிடங்களின் பின்னர், குறித்த விமானம், கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பான முறையில், தரையிறக்கப்பட்டுள்ளது.

நடுவானில் பயணித்துக்கொண்டிருந்த போது, குறித்த விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே தொடர்பு எல்லையிலிருந்து விலகி சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments