முல்லைதீவு நிலப்பிடிப்பு:மீண்டும் மீண்டும் கூடுகின்றதாம் கூட்டமைப்பு!
முல்லைதீவு நிலப்பறிப்பு தொடர்பாக மீண்டும் மீண்டும் கூடி கூட்டமைப்பு ஆராயவுள்ளதாம்.அவ்வகையில் எதிர்வரும் 19ஆம் திகதியன்று மீண்டும், கொழும்பில் இன்னுமொரு கூட்டத்தை கூட்டி, முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கப்படுமென, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு, கூட்டமைப்பு பல வழிகளில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றதெனச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் எம்.பி, இதற்கென செயலணியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், இது தொடர்பில் ஆராய்ந்ததாகத் தெரிவித்த அவர், அதேபோன்று எதிர்வரும் 19ஆம் திகதியன்றும், கொழும்பில் இன்னுமொரு கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.
அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடி, அவ்விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment