Header Ads

test

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஜெனீவா பயணம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றடைந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை தொடக்கம் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு வந்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தாம் தாயகத்தில் எதிர் நோக்கிய மற்றும் இன்றும் எதிர் நோக்கும் அவலங்களையும், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் கட்டமைப்பு சார் இனவழிப்பினையும் சர்வதேச சமூகத்தின் முன் பறைசாற்றவுள்ளனர். 

No comments