Header Ads

test

கூட்டமைப்பு- முன்னணி ஆதரவாளா்களுக்கிடையில் முறுகல்!

கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகம் இன்று (08.06.2018) முற்றுகையிடப்பட்டது.

அதில் ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், கொழும்பில் அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு இங்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர் என்று குறிப்பிட்டார்.

அதைக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.


கூட்டமைப்பின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினராக பன்னீர்ச் செல்வம் “2010ஆம் ஆண்டுக்கு முன்னர் நீங்கள் அதைத்தானே செய்தீர்கள்” என்று கஜேந்திரனுடன் தர்க்கப்பட்டார். அதையடுத்து குழப்ப நிலை ஏற்பட்டுப் பின்னர் தணிந்தது.


No comments