முதலமைச்சர் குழு ஆராய்வு:ஆளுநரும் தனது குழுவுடன்!
முல்லைதீவு எல்லைக்கிராமங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் நிலசுவீகரிப்பு தொடர்பில் வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு தனது ஆய்வின் முதலாம் கட்டத்தை பூரணப்படுத்தியுள்ளது.நேரடியாக அப்பகுதிகளிற்கு விஜயம் செய்து அக்குழு தனது அறிக்கையினை தயாரித்துவருவதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே கொக்கிளாயில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைக்கு தமிழ் மகனது காணியை வழங்க மிரட்டிவரும் வடக்கு ஆளுநர் மறுபுறம் மக்களது காணிகள் பிரச்சினை தொடர்பில் கவலை கொண்டுள்ளதாக வட மாகாண ஆளுநரது முகவர்கள் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.ஒருபுறம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைக்கு ஈடாக தனித்து நிர்வாகத்தை ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடத்திவருகின்றார்.
இந்நிலையில் முதலமைச்சரின் வசமிருக்கின்ற காணி அமைச்சின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு புறம் ஆளுரது ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவையொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நடமாடும் சேவை நேற்று நடாத்தப்பட்டது.
இதில் காணி அமைச்சின் மேலதிக செயலாளர் தயாரட்ன மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் குணபால வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கிராம சேவையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஆயினும் முல்லைத்தீவு அரச அதிபர் மற்றும் வட மாகாண காணி ஆணையாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் நாடு தழுவிய ரீதியில் அரச உயர் அதிகாரிகள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக நடமாடும் சேவையில் கலந்து கொள்ளவில்லையென சொல்லப்படுகின்றது.
எனினும் தற்போது ரெஜினோல்ட் கூரேயின் இணைப்பாளராக நியமனம் பெற்றுள்ள சுந்தரம் டிவகலாலாவும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தார்.
Post a Comment