ரம்ழான் வாழ்த்து சொன்ன வடக்கு முதலமைச்சர்!
இஸ்லாமியர்களின் திருநாள்களில் ஒன்றாக கருதப்படுகின்ற ஈகைத் திருநாளாகிய“ஈத்”கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற புனித ரம்ழான் மாதத்தில் நோன்பு நோற்றுகொண்டிருக்கின்ற அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் தனது அன்பையும் வாழ்த்துக்களையும் வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரம்ழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கப்பட்டு நிறைவேறிய பின்பு இறுதித் திருநாளான ஈகைத்திருநாளில் முஸ்லீம் சகோதர சகோதரிகள் அனைவரும் தமது திருநாளை மகிழ்வுடன் கொண்டாடவும். ஏனைய மதத்தைச் சார்ந்த சகோதர சகோதரிகளுடன் நட்புரிமையுடன் பழகவும் ஈகைத்திருநாள் சிறப்பு நிகழ்வுகள் வழிசமைக்கவேண்டும் என பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரம்ழான் நோன்பில் கூறப்பட்டவாறு அடுத்து வரும் 11 மாதங்களுக்கும் இஸ்லாம் மதத்தில் கூறப்படுகின்ற மனிதப ண்புக்கும் இறை ஒழுக்கத்திற்கும் அமைய உண்மையான முஸ்லீமாக தீமை இழைக்காதவனாக வாழ்வதற்குரியதைரியமும் ஒருசத்தியவாழ்வும் அனைத்து முஸ்லீம்களுக்கும் கிட்டவேண்டும் எனப் பிரார்த்தித்து தனது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment