கோத்தாவைக் ஹிட்லராக்குவது முட்டாள்த்தனமானது - ஜேர்மனி தூதுவர்
ஹிட்லரைப் போன்ற ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கோத்தாபய ராஜபக்சவுக்கு, அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர், அளித்த அறிவுரை பொறுப்பற்ற – முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரொட்.
சிறிலங்காவுக்கு ஒரு ஹிட்லர் தேவை என்று உபாலி தேரர் வெளியிட்டுள்ள மூர்க்கத்தனமான கருத்துக்கு, சிறிலங்கா அதிபர், பிரதமர் வெளியிட்ட கண்டனங்களுடன் தாம் முற்றிலும் இணங்கிப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவி உடை அணிந்து கொள்வது, பொறுப்பற்ற முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்காது என்பதையே இது நிரூபிக்கிறது.
எமக்கு இன்னும் அதிகமான ஜனநாயகம், தேவை. உலகம் முழுவதற்கும் அது தேவை. என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Post a Comment