Header Ads

test

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கொழும்பில் கொலை ?


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்திலிருந்து கொட்டாஞ்சேனைக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 35 வயதுடைய குறித்தப் பெண், நான்கு பிள்ளைகளின் தாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  சம்பவம் இடம்பெற்றபோது குறித்த வீட்டில் எவரும் இருக்கவில்லை என்றும், வீட்டின் உரிமையாளர் இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 குறித்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மரண விசாரணைகள் இன்று இடம்பெற உள்ளன.

No comments