அப்பாவுடன் வாருங்கள்! ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்
எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சி வருகை தரவுள்ள ஜனாதிபதி மாமா, எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக் கொண்டு வரவேண்டும் என ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ள சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த கோரிக்கையினை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளனர். அக் கோரிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, தாங்களும் இந்த நாட்டின் சிறுவர்கள். எனவே தங்களின் நிலைமையினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கோருகின்றோம். அம்மாவை இழந்தும் அப்பாவை பிரிந்தும் நானும் தங்கச்சியும் வாழ்ந்து வருகின்றோம், அம்மாவுடன் வாழ்வதற்கு எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.எனவே அப்பாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு என்றாலும் ஜனாதிபதி மாமா உதவ வேண்டும் என ஆனந்தசுதாகரனின் மகன் கோரியுள்ளார். |
Post a Comment